Vettri

Breaking News

மட்டக்களப்பின் பிரபல அரசியல்வாதி பயணித்த வாகனம் விபத்து




 


மட்டக்களப்பு பகுதியில், கெப் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது, இன்று (06) திருகோணமலை - மட்டக்களப்பு ஏ15 பிரதான வீதி கிளிவெட்டி 58ம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பிரபல அரசியல்வாதி ஒருவர் பயணித்த கெப்ரக வாகனமும் தெகிவத்தையில் இருந்து சேருவில நோக்கி பயணிப்பதற்காக பிரதான வீதிக்கு பயணித்த முச்சக்கர வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.  


பிரபல அரசியல்வாதி 

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்த - மந்தனபுர பகுதியில் வசித்து வரும் டபிள்யு.எம்.சேனககுபண்டார (39வயது) மற்றும் அவரது மனைவி எச்.எம்.நிலந்தி (34வயது) ஆகியோரே படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments