தங்கத்தின் விலை அதிகரிப்பு!!
நாட்டில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய (30) நிலவரப்படி, தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியதால், வர்த்தகர்கள் தங்கள் விலைகளை மாற்றியமைக்க தூண்டினர். இதற்கமைய இன்று வியாழக்கிழமை (30) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 168,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 185,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. உலகளாவிய சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.
முந்தைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலைகள் அதிகரிப்பை காட்டுவதாக தங்க வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். அண்மைக் காலங்களில் 24 காரட் தங்கம் 160,000 ரூபாய்க்கும், ஒரு பவுண் 24 காரட் தங்கம் 170,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டாலும், முந்தைய காலத்தை விட தங்க விற்பனை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வர்த்தகர்கள் தொடர்ந்து சந்தைப் போக்குகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள். மேலும் வளர்ந்து வரும் தங்கச் சந்தை நிலைமைகள் குறித்து நுகர்வோர் தொடர்ந்து அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments