முல்லைத்தீவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து இன்று (25) அதிகாலை 1 கிலோ 570 கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இரணைப்பாலை பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினுள் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது அவரது வீட்டு அறையில் பொதி செய்யப்பட்ட வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1கிலோ 570கிராம் கேரளா கஞ்சாவினை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 27வயதுடைய இளைஞனை கைது செய்ததுடன் இவருக்கு எவ்வாறு கஞ்சா கிடைக்கப்பெற்றது, எங்கிருந்து கொண்டுவந்தார் போன்றவாறாக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments