Vettri

Breaking News

லிட்ரோ எரிவாயுவின் அதிகரிக்கப்பட்ட புதிய விலைகள் அறிவிப்பு !





 லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 95 ரூபா அதிகரித்துள்ள நிலையில், புதிய விலை 3,565 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது

5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 38 ரூபா அதிகரிக்கப்பட்டு புதிய விலை 1,431 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேவேளை, 2.3 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 18 ரூபா அதிகரிக்கப்பட்டு 668 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments