தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது
எம்பிலிப்பிட்டிய பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொங்கட்டுவ 2 இலக்க கட்டைப் பகுதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் மயங்கி விழுந்த நபர் ஒருவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) ஆம் திகதி மாலை மதுபோதையில் குறித்த நபர் கடைக்கு அருகில் வந்துள்ளதுடன் இதன்போது பலருடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளதுடன் அதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது கொங்கட்டுவ, எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 23, 55 மற்றும் 57 வயதுடைய எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாணமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments