Vettri

Breaking News

இலங்கை வந்த டீசல் கப்பல்: ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்




 இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தால் (LIOC) இறக்குமதி செய்யப்படவிருந்த எரிபொருள் கப்பலில் இருந்த 19,000 மெட்ரிக் தொன் டீசலில், 11,000 மெட்ரிக் தொன் டீசல் தரமற்றதாக ஆய்வக சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.

தரமற்ற டீசல் இறக்குமதி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய கம்பனி ஆகியவற்றின் முகாமைத்துவ பணிப்பாளர் தர்ஷன ரத்நாயக்க ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும் போது குறித்த விடயதை கூறியுள்ளார்.

மேலும், 8400 மெற்றிக் தொன் டீசல் இரண்டு ஆய்வக சோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு முனையத்தில் டீசல் களஞ்சியப்படுத்தப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி

கொழும்பு துறைமுகத்தில் கடந்த 5ஆம் திகதி எம்.டி. ஃபோஸ் பவர் என்ற கப்பல் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்புகளுடன் நங்கூறமிடப்பட்டது.

இலங்கை வந்த டீசல் கப்பல்: ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் | 11 000 Metric Tonnes Diesel Substandard

அதனை தொடர்ந்து, தரநிலை ஆய்வுகளின் பின் குறித்த கப்பலில் இருந்த 92 ஒக்டேன் பெட்ரோலை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது, டீசல் கையிருப்புகளின் ஆய்வு நிறைசெய்யப்படாததால் அவற்றை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த 19,000 மெட்ரிக் தொன் டீசலில் 11,000 மெட்ரிக் தொன் டீசல் தரமற்றதாக ஆய்வக சோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.   

No comments