Vettri

Breaking News

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! இந்தியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா




 சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் முடக்கும் வகையில் அமெரிக்கா புதிய திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், “சீனாவுடன் போட்டியிடும் வகையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கான 553 மில்லியன் டொலர் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.

மிகப்பெரிய முதலீடு

இலங்கையில் அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு ஆகும் இது.

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! இந்தியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா | Us Investments In Sri Lanka Will Affect China

கடுமையான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு இது மகிழ்ச்சியையும், சீனாவிற்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

கொழும்பு துறைமுகம் 2021 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது, மேலும் இந்தப் புதிய முனையம் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு பெரிய பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும்.

பசிபிக் கடலில், சீன கடலில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா தற்போது இந்திய பெருங்கடலில் காலடி எடுத்து வைத்துள்ளது.

சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி

சீனாவின் ஆதிக்கத்திற்கு இது முற்றுப்புள்ளியாக அமையும் என்கிறார்கள்.

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! இந்தியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா | Us Investments In Sri Lanka Will Affect China

இன்னொரு பக்கம் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைப்பது இந்தியாவிற்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

பாதுகாப்பு ரீதியாகவும், கடல் ரீதியாகவும், ஆசிய வளர்ச்சி ரீதியாகவும் இந்தியாவிற்கு இந்த முடிவு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments