Vettri

Breaking News

தலவாக்கலையில் கத்திக்குத்து : இளைஞன் பலி !




 


தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட்  தோட்ட தொழிற்சாலை முன்பாக இடம் பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த நபர் கவலைக்கிடமான நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்த நபர் கிரேட் வெஸ்டன் பகுதியைச் சேர்ந்த  சிவஞானம்  சஜீவன் எனும் 22 வயதுடையவர் ஆவார்.  

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச் சம்பவம் இன்று இரவு 7 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.  

No comments