Vettri

Breaking News

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞன் கைது




 


விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின்  படங்கள் பொறித்த சட்டை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார். 

கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டார். 

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது. 

இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். 

குறித்த நபர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

சந்தேக நபரிடம் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக அறிய முடிகிறது.

No comments