Vettri

Breaking News

வவுனியாவில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் உயிரிழப்பு




 


வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பாக  கொடுங்கல் வாங்கலில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,  பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வவுனியா நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (28) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நெஞ்சுவலி என கூறி நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது, அவர் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார்.

வெளிநாடு செல்வதற்கு சிலர் குறித்த நபர் ஊடாக பிறிதொருவருக்கு பணம் கொடுத்துள்ளனர். பணம் பெற்றுக் கொண்டவர் பணம்  வழங்கியவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமையால், குறித்த நபருக்கு எதிராக பணம் கொடுத்தவர்கள் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்தி விளக்கமறியில் வைக்கப்பட்டு, நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே மரணமடைந்தவராவார். 

No comments