Vettri

Breaking News

கிழக்கில் அரங்கேறும் நில ஆக்கிரமிப்புகள்: போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள் கைது!

 மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் சந்திவெளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் வைத்ததே கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.

முதலாம் இணைப்பு 

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டக் களத்தில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதே என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கில் அரங்கேறும் நில ஆக்கிரமிப்புகள்: போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள் கைது! (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறல்

தமிழர்களின் பூர்விக இடங்களான மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி குடியிருப்புகளை அமைத்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த பகுதியில் மேச்சலில் ஈடுபடும் தமிழ் பண்ணையாளர்களுடைய கால்நடைகள் மீது துப்பாக்கிசூடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

கிழக்கில் அரங்கேறும் நில ஆக்கிரமிப்புகள்: போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள் கைது! (புதிய இணைப்பு) | Batticaloa Protest Today Jaffna Uni

இவ்வாறான சூழலில் பெரும்பான்மையாளர்களின் அத்துமீறல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கு நிரந்தர தீர்வு கோரியும் தமிழ் கட்சியினரும் தமிழ் அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் அங்கு இருந்ததற்கான ஆதாரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டுள்ளது. 

No comments