Vettri

Breaking News

கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த மாணவி




 வீட்டில் இருந்த இரண்டு மாத்திரைகளை உட்கொண்டதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பலப்பிட்டிய, மருதானை பிரதேசத்தை சேர்ந்த 13 வயதான வலிமுனி தினுஜி என்ற மாணவி ஆவார்.

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வீட்டிலிருந்த மாத்திரைகள் இரண்டை எடுத்து உட்கொண்டுள்ளார்.பிரேத பரிசோதனை

அதனையடுத்தே மாணவி உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த மாணவி | School Student Death

பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments