சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: மரணத்தில் சந்தேகம்
ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராகலை மத்திய பிரிவு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய கோவிந்தசாமி கிருஷ்ணகுமார் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பின்னணி
கடந்த 8 வருடங்களாக இராகலை நகரில் ஹாட்வெயார் கடை ஒன்றை வைத்துள்ள இவர் தனது கடைக்கு 6 இலட்சம் ருபாய் பெறுமதியான பொருட்களை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் கடனாக பெற்றுள்ளார்.
கடனை மீள செலுத்துவதில் சில குழறுபடிகள் ஏற்பட்டதால் நீர்கொழும்பு நீதிமன்றில் இவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டது.
அதன் பின்னர் அவர் பெற்ற கடன் தவணை முறையில் செலுத்தப்பட்டு வந்தது.
எனினும் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு, உயிரிழந்த நபர் இரண்டு முறை முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அதனை தொடர்ந்து நீர்கொழும்பு காவல்துறையினர் கடந்த 23ஆம் திகதி இவரை கைது செய்துள்ளனர்.
நீதவான் உத்தரவு
அதன் பின்னர் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவரை நாளையதினம் (29) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் பதுளை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு தேவையான பொருட்களை தாம் பெற்றுக் கொடுத்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராகலையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம்(26) இரவு சென்று கிருஷ்ணகுமார் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நேற்று (28) அதிகாலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.
இறுதிக் கிரியைகள்
அவர் அணிந்திருந்த சாரத்தினால் அவர் கழுத்து இறுக்கப்பட்டு இருந்ததாகவும் , பதுளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர் எப்போது நீர்கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது சகோதரன் இவ்வாறு முடிக்கவெடுக்க மாட்டார் என உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளதுடன் அவரது மனைவியும் கணவரின் மரணத்தில் சந்தேகம் உண்டு என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் நாளையதினம் இடம்பெறவுள்ளமை
No comments