யாழில் வாள்வெட்டு! வீதியால் சென்ற இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த வாள்வெட்டு சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
இதில் கந்தவுடையார் ஒழுங்கை, பருத்தித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டிலக்சன் (வயது 23) என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
வீதியால் சென்ற இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments