Vettri

Breaking News

தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை : நாடாளுமன்ற தர நிர்ணய சட்டமூலம்!




 தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குதண்டனையளிப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் வரையப்பட்டுள்ள புதிய சட்டமூலமொன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தமது பதவியின் கௌரவத்தை பாதுகாக்க தவறுகின்ற மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை : நாடாளுமன்ற தர நிர்ணய சட்டமூலம்! | Parliamentary Standardization Act Wijeyadasa Sl

நாடாளுமன்ற தர நிர்ணய சட்டமூலம் என்ற பெயரிலான குறித்த சட்டமூலம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுயாதீனமான குழுவொன்றின் ஊடாக தண்டனை விதிப்பதற்கு குறித்த சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் வகையிலான ஏற்பாடுகளும் குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.” என்றார்.

No comments