Vettri

Breaking News

மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த நால்வர் பாதுகாப்பாக மீட்பு!





 மாரவில முதுகட்டுவ பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த ஜப்பானிய பிரஜை உள்ளிட்ட 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரும் குறித்த பகுதியில் உள்ள மீனவர்களும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின்போது அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஜப்பான் பிரஜை உள்ளிட்ட 6 பேர் மீன்பிடிப்பதற்காக படகொன்றில் கடலுக்கு சென்றுள்ளனர். இதன்போது, நேற்று பெய்த அதிக மழை காரணமாக குறித்தப் படகு கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, படகை செலுத்தியவர் உட்பட இருவர் பாதுகாப்பாக கரைக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த 4 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments