ஆதரவற்றோருக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு!
ஓய்வூதியப் பங்களிப்பிற்காக அறவிடப்படும் சதவீதத்தை 2024 ஏப்ரல் முதல் அனைத்து சேவைப் பிரிவினருக்கும் 8 சதவீதமாக அதிகரிப்பதற்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளது.
ஆதரவற்றோருக்கான ஓய்வூதியமானது, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 6 - 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பாகவுள்ள நிலையில் இதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபா 65 பில்லியன் செலவு செய்கிறது.
குறித்த திட்டத்திற்காக ஊழியர்களிடமிருந்து ஆண்டுதோறும் ரூபா 38 பில்லியன் அறவிடப்படுகிறதோடு அரசதுறை ஊழியர்களின் பங்களிப்பு, இதனை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை.
இதனுடாக ஆண்டுதோறும் ரூபா 9 பில்லியனை மேலதிகமாக அறவிடுவதற்கு முடிவதுடன் இது விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துவதையும் உறுதிப்படுத்துகிறது.
No comments