கல்வி அமைச்சின் அறிவிப்பு
நாடளாவிய ரீதியிலுள்ள சகல தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய சகல தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளுக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமையன்று முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
No comments