Vettri

Breaking News

என்னுடன் விளையாட வேண்டாம்: கடும் தொனியில் எச்சரித்தார் ரணில்







 தன்னுடன் விளையாட வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தபால் நிலைய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 04 ஆம் திகதி நுவரெலியாவில் இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கடும் தொனியில் பேசியுள்ளார்.

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலா விடுதியாக நடத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாதது தொடர்பில் வினவப்பட்டபோதே அதிபர் இவ்வாறு பேசியுள்ளார்.சுற்றுலாத்துறைக்கு கட்டடத்தை வழங்குவதற்கு அதிபர் என்ற ரீதியில் தான் வழங்கிய பணிப்புரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதனை நடைமுறைப்படுத்த தபால் மா அதிபர் இணங்காவிட்டால், மற்றுமொருவரை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என அதிபர் தெரிவித்தார்.

No comments