தொடரும் சீரற்ற வானிலை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தொடர்ந்து வரும் சீரற்ற வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தின் தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் 04 அடி வீதம் 05 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகிஸ்வர தெரிவித்துள்ளார்.
மேலும், உடவலவ நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நீர்த்தேக்கங்களை அண்மித்த மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை
மேலும், அத்தனகலு ஓயா மற்றும் நில்வலா ஆற்றுப்படுகைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென எஸ்.பி.சி.சுகீஸ்வர வலியுறுத்தியுள்ளார்.
No comments