பாம்பு தீண்டி யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 55 வயதுடைய அருச்சுணன் சுந்தரலிங்கம் என்பவராவார்.
கடந்த 31 ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் மனைவியுடன் தோட்டத்தில் களை பிடுங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்போது இரத்தப்புடையன் பாம்பு அவரை கையில் தீண்டியதை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.
இம்மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணையினை மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் இன்றையதினம் (17) உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
No comments