அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று வேலைநிறுத்தை முன்னெடுக்கின்றனர்!
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் திட்டமிட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் மற்றும் அரச சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினரின் பங்குபற்றுதலுடன் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை தொடர்ந்து இன்று அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வரிக் குறைப்பு, கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
No comments