இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவில் டீசல் திருடிய ஊழியர் கைது
குளியாப்பிட்டியிலுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவில் 3 லீற்றர் டீசலை திருடிய ஊழியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (27) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய லங்காம டிப்போவின் அதிகாரியொருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments