அங்குருவாதொட்ட வயலில் ஆணின் சடலம் மீட்பு
அங்குருவாதொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெனிவல்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் ஒன்றில் இரத்தம் கசிந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அங்குருவாதொட்ட , வெனிவல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹெரண வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments