சம்பளத்திற்கும் விலைச்சூத்திரம்: முன்வைக்கப்பட்ட கோரிக்கை
சம்பளத்திற்கும் விலைச்சூத்திரம் உருவாக்கப்பட வேண்டுமென சுதந்திர பெண்கள் இயக்கத்தின் தேசிய குழு உறுப்பினர் தில்கா சுராங்கனி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பொருளாதார பின்னடைவால் ஏற்பட்டுள்ள சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழக் கூடிய ஊதியத்தை வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விலைச்சூத்திரம்
மேலும், பொருட்களின் விலை உயர்வை பொருத்து சம்பளத்திற்கும் விலைச்சூத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, எரிபொருள், மின்சாரம், நீர் போன்றவற்றுக்கு விலை சூத்திரம் இருந்தாலும், சம்பளத்திற்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவது நடைமுறைக்குரியது என வடமேற்கு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெட்சில பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments