Vettri

Breaking News

பாடசாலைகளில் டெங்கு அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை




 மேல் மாகாணத்தில் சுமார் 70 வீதமான பாடசாலைகள் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது என டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்கள்

மேலும், இந்த ஆண்டு இதுவரையில் 72,337 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு நவம்பர் மாதம் மட்டும் 36,844 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளில் டெங்கு அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | The Dengue Control Unit Warning To Schools

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு, அவற்றை கட்டுப்படுத்துமாறும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments