தமிழர் பகுதியில் பாரிய விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்
ஒட்டிசுட்டான் காவல் பிரிவிற்குட்பட்ட சமளங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து, நேற்றையதினம் (06) இரவு இடம்பெற்றுள்ளது.
நெடுங்கேணியில் இருந்து ஒட்டிசுட்டான் நோக்கி சென்ற ஹயஸ்ரக வாகனமும், ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து நெடுங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை.
இந்த விபத்தில், நெடுங்கேணி பகுதியை சேர்ந்த (37) வயதுடைய பழனியாண்டி தியாகராசா என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய ஹயஸ் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments