நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இரண்டு சட்டத்தரணிகளுக்கு இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் தொடர்பில் கெசல்வத்தை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (2) பிற்பகல் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதி
மோதலின் பின்னர் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெசல்வத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வழக்குகளை பகிர்வது தொடர்பான வாக்குவாதத்தின் பின்னரே இந்த மோதல் இடம்பெற்றதாக தற்போதைய ஆரம்பகட்ட விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குகளை பகிர்ந்து கொள்வது
ஒரு மாதத்திற்கு முன்பு வழக்குகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக குறித்த வழக்கறிஞர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments