Vettri

Breaking News

நகைக்கடையில் கொள்ளையிட முயன்ற கும்பலை மடக்கி பிடித்த மக்கள்!




 


கல்முனை காவல் பிரிவிற்குட்பட்ட மருதமுனையில் பிரபலமான நகைக்கடையொன்றில் உரிமையாளர் தனிமையில் இருந்த வேளை நகை வாங்குவதாகக் கூறிக்கொண்டு கடைக்குள் நுழைந்த திருட்டு கும்பலை மருதமுனை மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

இந்த சம்பவமானது நேற்றைய தினம் (15) மருதமுனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கறுப்பு நிறக் காரில் வந்த 3 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்கிய கும்பலையே மக்கள் மடக்கிப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

No comments