Vettri

Breaking News

அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு! அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்




 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களுக்கு முறையான சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னர் தெரிவித்திருந்தார்.

சம்பள அதிகரிப்பு

இது குறித்த விவாதங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றதாகவும் இதற்கு இணக்கம் கிட்டியுள்ளதாகவும் சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு! அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் | Government Employees Salary Increase Budget 2024

அதற்கமையவே, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்கள்

சம்பள உயர்வு உள்ளடங்கலாக பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பல தரப்பு அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களின் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் மிகவும் சிறமப்பட்டு வழங்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு! அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் | Government Employees Salary Increase Budget 2024அதேவேளை, சம்பளத்தில் மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பது குறித்து போராட்டங்களில் ஈடுபடுவோருக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments