Vettri

Breaking News

தமிழர் பகுதியில் தொடர்ச்சியாக காணாமல் போகும் கால்நடைகள்




 கிளிநொச்சி கனகபுரம் 10 பண்ணைபகுதிகளில் தொடர்ச்சியாக கால்நடைகள் திருடப்பட்டு வருவதோடு, களவுகளும் இடம்பெற்று வருகிறதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வருகின்ற கால்நடைகள் திருடப்பட்டு பராமரிப்பு இன்றி காணப்படுகின்ற காணிகளுக்குள் வெட்டப்படுகின்றது.

இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொது மக்கள், பகல் வேளைகளில் வீடு புகுந்து கத்தி முனையில் பணம் நகைகள் என்பனவும் கொள்ளையிட்டு சென்ற சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் வேண்டுகோள்

மேலும், காவல் நிலையங்களில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் எந்த பயனும் இல்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் தொடர்ச்சியாக காணாமல் போகும் கால்நடைகள் | Cattle Theft Continues In Srilanka

அதேவேளை, சம்மாந்துறை காவல் பிரிவிலும் இவ்வாறானதாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், திருட்டு சம்பவங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பொது மக்களை சம்மாந்துறை காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் வியாழன்(2) மற்றும் வெள்ளிக்கிழமைகளில்(3) மாடுகள் அதிகமாக களவாடப்படுவதாகவும் இவ்வாறு களவாடப்படும் மாடுகள் அறுவைக்கு உள்ளாக்கப்பட்டு பங்கு இறைச்சியாக விற்பனை செய்யப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திருட்டு சம்பவம்

ஆகவே பொது மக்கள் தங்களுக்கான இறைச்சியை கடைகளில் பெற்றுக் கொள்வதே சிறந்ததாகவும் பங்குகளுக்காக வெட்டப்படும் மாடுகளில் அதிகமானவை களவாடப்பட்ட மாடுகளாகவே உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமிழர் பகுதியில் தொடர்ச்சியாக காணாமல் போகும் கால்நடைகள் | Cattle Theft Continues In Srilanka

எனவே, மாடுகளை வைத்திருப்போர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் அதிகமானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அருகில் இருக்கும் அயல்வீட்டு உறவினரிடம் நாம் வெளியே செல்வதாகவும் கூறி, வீட்டில் உள்ள அனைவரும் வெளியே செல்கின்றனர், சில நேரங்களில் அதை முகநூலிலும் பதிவிடுகின்றனர்.

அதை தொடந்து திருடர் அவ்வாறான வீடுகளை இனங்கண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர்.

போதைபொருள் பாவனை

மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறும் இந்த வருடம் மாத்திரம் 03 மோட்டார் வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் தொடர்ச்சியாக காணாமல் போகும் கால்நடைகள் | Cattle Theft Continues In Srilanka

மேலும் வயல் வேலைகளில் ஈடுபடுவதற்காக செல்வோர் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேசத்தில் இவ்வாறான குற்றச் செயலில் அதிகமாக போதைபொருள் பாவனையில் உள்ளவர்களே ஈடுபடுகின்றதாகவும் எனவே இரவு நேரத்தில் உங்களுடைய பிரதேசங்களில் சந்தேகத்திற்கு இடமாக யாரும் நடமாடினால் உடனடியாக சம்மாந்துறை காவல்துறையினரிடம் அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

No comments