தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் தீ பரவல்!!
மீரிகம – தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த இறப்பர் தொழிற்சாலையில் நேற்றிரவு 9.20 அளவில் தீ பரவியது.
இரசாயனப் பொருட்கள் காணப்பட்ட பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவலினால் உயிர் சேதங்கள் பதிவாகவில்லை.
No comments