Vettri

Breaking News

தடுப்பூசி மோசடி குறித்து வெளியான மற்றுமொரு தகவல்




 இலங்கையில் இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்து குப்பிகளை தயாரிப்பதற்காக தேசிய இரத்த மையத்தில் இருந்து இரத்தம் பெறப்பட்டமை குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தேவை எனக் கூறி குறித்த இரத்தம் பெறுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் மேலும்  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள்

இந்நிலையில், இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் தயாரிப்பில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகளில் தாமதம் ஏற்படுவது பிரச்சினைக்குரியது என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி மோசடி குறித்து வெளியான மற்றுமொரு தகவல் | Immunoglobulin Vaccine Drug Fraud Sri Lanka

கடந்த காலங்களில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த தற்போதைய சுகாதார அமைச்சருக்கு தனது ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.  

No comments