Vettri

தொடர்ந்து வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவி





 இராணுவ பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி பதவி இன்னும் வெற்றிடமாக இருப்பதாக இராணுவத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க ஓய்வு பெற்று ஒன்றரை மாதங்களாக இந்தப் பதவி வெற்றிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தின் நிர்வாகப் பணிகளில் மிக உயரிய பதவியான இராணுவ பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படாததால், பல நிர்வாகச் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், இராணுவ பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு அதிகாரி ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி உரிய நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட வேண்டும் எனவும், இதுவரையில் நியமனம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments