கொத்து மற்றும் ரைஸ் என்பவற்றின் விலை அதிகரிப்பு
கொத்து மற்றும் ரைஸ் என்பவற்றின் விலை அதிகரி்க்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இன்று(04)கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று (04) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
உணவுப் பொதியொன்றின் விலை
சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக தேயிலையின் விலை 5 ரூபாவினாலும் பால் தேயிலையின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக உணவுப் பொதியொன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் ரைஸ் என்பவற்றின் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments