போலி ஒஸ்திரிய நாட்டு கடவுச்சீட்டுடன் இலங்கையிலிருந்து வெளியேற முற்பட்ட ஈரானியப் பெண் கைது !
போலியான ஒஸ்திரிய நாட்டு கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் பிரவேசித்த ஈரானிய பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகல் அதே கடவுச்சீட்டுடன் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
53 வயதான குறித்த பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறவிருந்தபோது கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
குறித்த பெண் இலங்கைக்குள் பிரவேசிக்க பயன்படுத்திய ஒஸ்திரிய நாட்டு கடவுச்சீட்டு போலியானது என வருகை முனையத்தில் உள்ள கணினி அமைப்பினர் கண்டறிந்துள்ள நிலையில், அவரது வருகையின் நோக்கத்தை அறியந்து கொள்ளவதற்கா அதிகாரிகள் அவரை நாட்டுக்குள் செல்ல அனுமதித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த குறித்த பெண் தனது கடவுச்சீட்டில் கொழும்பில் இருந்து பெறப்பட்ட இந்திய வீசாவை போன்றதொரு மற்றும் மொருவிசாவில் நேற்று இந்தியா செல்ல முயற்சித்துள்ள நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரை விமான நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
No comments