Vettri

Breaking News

கோப்பாய் பகுதியில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது




 கோப்பாய் பிரதேசத்தில் இருவேறு வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரையும் உடந்தையாக இருந்தவர்கள் என  மூவரையும்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் காவல்துறை பிரிவில் கடந்த மார்ச் மாதம் (05)ஆம் திகதி அதிகாலை வேளை ஆட்கள் இல்லாத நேரம் வீடு உடைத்து ஐந்தே கால் பவுண் நகைகளை களவெடுத்தமை மற்றொரு வீட்டில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி வீட்டில் ஆட்கள் அற்ற நிலையில் 13 பவுண் நகைகளை திருடியமை தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.



அவை தொடர்பில் உப காவல் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்  விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கோப்பாய் பகுதியில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது(படங்கள்) | Mannar Stole Gold Jewellery Case

ஒரு தொகுதி நகைகள்

அதனை தொடர்ந்து, முதன்மை சந்தேகநபரான திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதுடையவரையும் நகைகயை வாங்கி உருக்கிய ஒருவரையும் உடந்தையாக இருந்த பெண் என 3 பேரையே தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு தொகுதி நகை மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments