இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உடனடியாக இராஜினாமா செய்யவேண்டும் - விளையாட்டுத்துறை அமைச்சர்
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உடனடியாக பதவி விலகவேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய அணியுடனான மிக மோசமான தோல்வியின் எதிர்விளைவுகள் தொடர்கின்ற நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கை அணி உலககிண்ணபோட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்கான பொறுப்பை தெரிவுக்குழுவினரும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபை தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர்கள் பதவியிலிருந்து விலகவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்தியுஸ் சந்திமல் போன்றவர்கள் அணியில் சேர்க்கப்படாமை அணி விளையாடிய விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது அவர்களை அணியில் இணைத்துக்கொள்ளாமல் பழிவாங்கியது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments