Vettri

Breaking News

பலாங்கொடையில் மண்சரிவு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாயம்




 பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பலாங்கொடையில் மண்சரிவு! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாயம் | Landslide In Balangoda

மண்சரிவில் காணாமல் போனோரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பப்பட்டுள்ளது

எனினும், குறித்த பகுதியில் கடும் இருள் சூழ்ந்துள்ளமை மற்றும் மழையுடனான வானிலை காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments