யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பரப்பில் சட்ட விரோதமாக கடலட்டை பிடித்த நால்வர் கைது!
யாழ்ப்பாணம் - குருநகர் கடல் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக கடலட்டை பிடித்த நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்தவேளை, மண்டைதீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான நால்வரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்று (05) பகல் கைதான நான்கு பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல்வள திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments