விஹாரமகாதேவி பூங்கா மாநாகர சபையிடம் வழங்க அனுமதி
கொழும்பு - விஹாரமகாதேவி பூங்காவின் பொறுப்பை கொழும்பு மாநாகர சபையிடம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமது அதிகார சபைக்குட்பட்ட நிர்வாக பொறுப்பை கொழும்பு மாநாகர சபைக்கு மாற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.கே ரணவீர தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் உதவித் திட்டம்
கொழும்பு மாநகர சபையின் கோரிக்கைக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் விகாரமஹாதேவி பூங்காவின் பொறுப்பு கொழும்பு மாநகர சபையின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளுக்காக 2004 ஆம் ஆண்டில் விஹாரமகாதேவி பூங்கா நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments