வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்க தயார்: நாடாளுமன்றில் ரணில் உறுதிமொழி
வடக்கில் சிறந்த பொருளாதாரம் இருக்கின்றது எனவே அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்யவுள்ளோம் என சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எமது தொழிலாளர்களை நீண்ட காலமாக அனுப்பி வருகின்றோம்.
அதன் பிரகாரம் தொழில் அமைச்சர் அடுத்த கட்டமாக இஸ்ரேலுக்குத் தொழிலுக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்திருக்கின்றார். இஸ்ரேலுக்குத் தொழிலுக்குச் செல்ல தற்போது 10 ஆயிரம் பேர் தயாராக இருக்கின்றார்கள் என நான் நினைக்கவில்லை.
குறிப்பாக பசுமைப் பொருளாதாரம், எரிசக்தி தொடர்பான பொருளாதாரம் போன்ற பல வளங்கள் அங்கு இருக்கின்றன. அதனால் அடுத்த தசாப்தத்தில் வடக்கில் பலமான பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்.
எனவே, காசா தொடர்பில் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்பாக ரவூப் ஹக்கீம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை" என்றார்.
No comments