பல கோடி சம்பளம் பாக்கி.. கடும் அப்செட்டில் இருக்கும் லோகேஷ் கனகராஜ்
சம்பளம் பாக்கி
லியோ படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ. 5 கோடி சம்பளம் பாக்கி என சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது.
7 ஸ்க்ரீன் நிறுவனம் மூலம் லியோ படத்தை தயாரித்த லலித் குமார் இதுவரை அந்த பாக்கி பணத்தை லோகேஷ் கனகராஜுக்கு செட்டில்மென்ட் செய்யவில்லை என கூறப்பட்டது.
அப்செட்டில் லோகேஷ்
ஆனால், உண்மை அது இல்லை. லியோ படத்தை இயக்குவதற்காக லோகேஷுக்கு ரூ. 22 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.
படம் வெளிவருவதற்கு முன்பே முழு சம்பளத்தையும் தயாரிப்பாளர் லலித் குமார், லோகேஷுக்கு செட்டில் செய்துவிட்டாராம். ஆனாலும் இதுபோன்ற பொய்யான தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது.
இதனால் லோகேஷ் கனகராஜ் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். விரைவில் பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து விவரத்துடன் பேச லோகேஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
No comments