நாரிகம கடற்கரையில் நீராடிய பிரித்தானிய பிரஜை நீரில் மூழ்கி பலி
காலி ஹிக்கடுவை நாரிகம கடற்கரையில் நீராடிய பிரித்தானிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 60 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவர் ஆவார்.
இவர் சுற்றுலாக்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குழுவொன்றுடன் கடற்கரையில் நீராடச் சென்ற இவர் நீரில் மூழ்கிய நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த பிரஜை சிகிச்சைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments