இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட தடை: ரணில் எடுத்த அதிரடி முடிவு
சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
அதிபர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இடைக்கால குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு இது தொடர்பான அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கசப்பான தோல்விகள்
2023 உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை அணி பலபோட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி பல கசப்பான தோல்விகளை தொடர்ந்து பெற்றது.
அதனை தொடர்ந்து சிறிலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்துள்ளது.
No comments