இலங்கையில் அதிகரித்துள்ள நீரிழிவு நோய்த்தாக்கம்!
இலங்கையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோரின் வீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 10 நாடுகளுக்குள்
மேலும், நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ள நாடுகளில் உலகின் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முறையற்ற உணவுப்பழக்கவழக்கம், மற்றும் அதிகரித்த மன அழுத்தம் போன்ற மேலும் பல காரணங்களினால் இந்த நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், இலங்கையில் பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த இந்த ஆய்வு குறித்து கருத்துரைக்கும் போது தெரிவித்துள்ளார்.
No comments