Vettri

Breaking News

குடும்ப தகராறு: இளம் மனைவியை கொலை செய்த கணவன் எடுத்த விபரீத முடிவு!




 களுத்துறை மாவட்டம் அளுத்கம - தன்வத்தகொட பகுதியில் மனைவியை அடித்துக் கொன்றவர் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மனைவியின் தலையில், கணவன் அடித்துள்ளார் 

குடும்ப தகராறு 

இதனால் பலத்த காயம் அடைந்த பெண் கீழே விழுந்ததை அடுத்து, கணவர் வீட்டின் முன் அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் விசாரணையில் இருவரும் நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் முரண்பட்டு வந்துள்ளமை தெரியவந்ததுள்ளது.

குடும்ப தகராறு: இளம் மனைவியை கொலை செய்த கணவன் எடுத்த விபரீத முடிவு! | Death Police Investigating Srilanka Colombo

குறித்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக நோய் காவு வண்டி வந்தபோதிலும் அவர் உயிரிழந்தமை தெரிந்து கொண்ட ஊழியர்கள் சடலத்தை எடுக்காமல் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

குடும்ப தகராறு: இளம் மனைவியை கொலை செய்த கணவன் எடுத்த விபரீத முடிவு! | Death Police Investigating Srilanka Colombo

இந்த சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினர், களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments