Vettri

Breaking News

தரமற்ற டீசல்கள் சந்தைக்கு விநியோகம் : சஜித் சீற்றம்!




 தரமற்ற டீசல் கையிருப்பு சந்தைக்கு விடப்பட்டமை தொடர்பில் விரிவான அறிக்கையினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இந்த தரமற்ற டீசல் மாதிரிகள் தொடர்பான சோதனை அறிக்கைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், டீசல் கையிருப்பு சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் நாடாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தரம் வாய்ந்த டீசல்

இந்த தரமில்லாத கையிருப்பிலுள்ள டீசலானது சிறந்த தரம் வாய்ந்த டீசலுடன் கலக்கப்பட்டு சந்தைக்கு விடப்பட்டதாக பிரேமதாச கூறினார்.

தரமற்ற டீசல்கள் சந்தைக்கு விநியோகம் : சஜித் சீற்றம்! | Release Of Substandard Diesel In Sri Lanka

சோதனை அறிக்கைகள் மற்றும் குறிப்பிட்ட டீசல் கையிருப்பு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய விரிவான அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இதன் போது அவர் தெரிவித்தார். 

No comments