மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு !
மலையகத்திற்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 154 ஆம் கட்டை பகுதியில், இன்று காலை ரயில் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ரயிலின் இயந்திர பகுதியின் மீதே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் அதனை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments