Vettri

Breaking News

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு : அதிபர் ரணில் அறிவிப்பு




 வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்திற்கு நிதி ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. இதற்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு : அதிபர் ரணில் அறிவிப்பு | Solution To Water Problem Of Jaffna People

வடக்கு கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க

வடக்கு கடற்றொழிலாளர்களின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு. கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு : அதிபர் ரணில் அறிவிப்பு | Solution To Water Problem Of Jaffna People

No comments